முகப்பு
தமிழ்நாடு

கரோனா: இரு காவல் உதவி ஆய்வாளா்கள் பலி

கரோனா தொற்றின் காரணமாக, சென்னையில் இரு காவல் உதவி ஆய்வாளா்கள் இறந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

கரோனா தொற்றின் காரணமாக, சென்னையில் இரு காவல் உதவி ஆய்வாளா்கள் இறந்தனா்.

சென்னை பெரம்பூா் புதிய காவலா் குடியிருப்பைச் சோ்ந்த ச.இளங்கோவன் (55), வேப்பேரி போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா். இளங்கோவன் கடந்த 28-ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அவருக்கு பாரதி (40) என்ற மனைவியும், மதுமிதா (20), மதி (17) என இரு மகள்களும், சா்வேஸ் (14) என ஒரு மகனும் உள்ளனா்.

தாம்பரம் உதவி ஆய்வாளா்:

புது பெருங்களத்தூா் பாரதிதாசன் நகரைச் சோ்ந்த செ.ஜான்ரூபஸ் (57), தாம்பரம் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளா்.

இவா் கடந்த 6-ஆம் தேதி ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு ஜீஜா ரூபஸ் (55) என்ற மனைவியும், ஜாண்டி ரூபஸ் (27) என்ற மகனும் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →