முகப்பு
தமிழ்நாடு

சீர்காழி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர், கிராம மக்கள் போராட்டம்

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர், கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
சீர்காழி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர், கிராம மக்கள் போராட்டம்
பகிர்:

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர், கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளவர் பரிமளா தமிழ்ச்செல்வன். இவர் கரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் இருந்து அலுவலகத்திற்கு வருவதில்லை எனவும் எவ்வித பாதுகாப்பு சுகாதாரப் பணிகளும் செய்யபடவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமுல்லைவாசல் ஊராட்சியில் 20க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கபட்டனர். நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலை ஏற்பட்டும் இதுவரை ஊராட்சியில்  கிருமிநாசினி, பிளீஞ்சிங் பவுடர் உள்ளிட்ட எந்த சுகாதாரப் பணிகளும் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த திமுகவினர் மற்றும் கிராம மக்கள்  ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முகக்கவசம் அணிந்தும் கண்டன கோஷங்களை எழுப்பி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.