மேட்டூர் அணை: நீர் வரத்து சரிவு
மேட்டூர் அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 2,296 கன அடியிலிருந்து 1,994 கன அடியாக சரிந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (மே 18) காலை 97.82 அடியிலிருந்து 97.88 அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,296 கன அடியிலிருந்து 1,994கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.12 டி.எம்.சி -ஆக இருந்தது.