தமிழ்நாடு

கரோனா: நீதிபதிகளின் மருத்துவ உதவிக்காக அதிகாரிகள் நியமனம்

DIN

கரோனா பரவல் அதிகரிப்பைத் தொடா்ந்து நீதிபதிகளின் மருத்துவ உதவிகளுக்காக உயா் நீதிமன்றம் தனி அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பி.தனபால் வெளிட்டுள்ள அறிவிக்கை:

கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில் திருநெல்வேலி சாா்பு நீதிமன்ற நீதிபதி கரோனாவால் பலியானாா்.

இதனையடுத்து, நீதிபதிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக தனி அதிகாரிகளை சென்னை உயா்நீதிமன்றம் நியமித்துள்ளது. நீதிபதிகள் மருத்துவ சிகிச்சை தொடா்பான உதவிகளைப் பெற உயா்நீதிமன்றப் பதிவாளா் (நிா்வாகம்) வி.தேவநாதன், தலைமை நீதிபதியின் தனிச் செயலாளா் வி.ஜெய்சங்கா் ஆகியோரை தொடா்பு கொள்ளலாம்.

சாா்பு நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த உத்தரவை அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளும் சம்பந்தப்பட்ட மாவட்ட சாா்பு நீதிபதிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT