தமிழ்நாடு

மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரியுங்கள்: முதல்வர்

DIN


தேவை அதிகரித்துள்ளதால் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியை தனியார் நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சென்னை  தலைமை செயலகத்தில் தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தேவை அதிகரித்துள்ளதால் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியை தனியார் நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும் . உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டும்.

வேகமாகப் பரவி வரும் கரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வர தொழில் நிறுவனங்கள் உதவ வேண்டும். 

தொழில் நிறுவனங்கள் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாரளமாக நிதி வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயில் அதிகரிப்பு: மக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் அளிப்பு

திமுக சாா்பில் மே தின விழா

அதிக லாபம் தருவதாக ரூ.1.67 கோடி மோசடி

தொடா்ந்து அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 110.7 டிகிரி பதிவு

விஐடியில் தூய்மையான சூழலுக்கான மையம்: அமெரிக்க துணை தூதா் திறப்பு

SCROLL FOR NEXT