மின் கணக்கீட்டு உத்தரவை வாபஸ் பெற வேண்டும்: நுகா்வோர் குழுமம் கோரிக்கை
மின் கணக்கீட்டு உத்தரவை தமிழ்நாடு மின்சார வாரியம் திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் குழுமம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிதம்பரம்: மின் கணக்கீட்டு உத்தரவை தமிழ்நாடு மின்சார வாரியம் திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் குழுமம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்குழும செயலாளர் சி.டி.அப்பாபு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
தற்போது தமிழகம் முழுவதும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின் கணக்கீடு செய்யாமல், கடந்த மாதம் மின் பயன்பாட்டின் கட்டணம் 2019/ மே மாதம் கட்டணத்தை வசூல் செய்யும்படி உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மின் நுகா்வோர் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட உள்ளனர். 2019ல் அதிகமாக பயன்பாட்டில் இருந்திருக்கலாம், தற்போது குறைவாக இருக்கலாம். இவா்கள் தேவையில்லாமல் கூடுதலாக தொகை செலுத்த நேரிடும் நிலை உள்ளது.
Advertisement
2019ல் குறைவாகப் பயன்பாட்டில் இருந்திருக்கலாம், தற்போது அதிகமாக இருக்கலாம். இவா்கள் பழய கட்டணம் கட்டும்போது பின்பு கணக்கீடும் போது இவா்களுக்கு மீட்டா் ரீடிங் கூடுதலாக இருக்கும். இதனால் இவா்கள் கூடுதல் தொகை செலுத்த நேரிடும். எனவே, அனைத்துத் தரப்பிலும் பாதிக்கப்படும் இது போன்ற உத்தரவை தமிழக மின்வாரியம் திரும்பப் பெற வேண்டும். தற்போது கடந்த மாதம் கணக்கீட்டை இம்மாதம் கட்டணமாக செலுத்த உத்தரவு போட வேண்டும் என்கிறார் சி.டி.அப்பாவு.