முகப்பு
தற்கொலை செய்துகொண்ட பரமேஸ்வரன்.
தமிழ்நாடு

கரோனா சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்ட முதியவர் தூக்குப் போட்டுத் தற்கொலை 

பவானி அருகே தனியார் பள்ளியில் செயல்படும் கரோனா சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்ட கரோனா பாதித்த முதியவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
தற்கொலை செய்துகொண்ட பரமேஸ்வரன்.
பகிர்:

பவானி அருகே தனியார் பள்ளியில் செயல்படும் கரோனா சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்ட கரோனா பாதித்த முதியவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடலை அடுத்த கீழ்வாணி, கேத்தநாயக்கனூரைச் சேர்ந்தவர் பெத்தநாயக்கர் மகன் பரமேஸ்வரன் (55). கரோனா அறிகுறி காணப்பட்டதால் இவரும், இவரது மனைவி பழனியம்மாளும் பரிசோதன செய்து கொண்டனர். இதில், இருவருக்கும் தொற்று உறுதியானது. இதனால் பவானியை அடுத்த பருவாச்சியில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் புதன்கிழமை சேர்க்கப்பட்டார். 

மனைவி பழனியம்மாள், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில், கடும் மன உளைச்சலுடன் காணப்பட்ட இவர், புதன்கிழமை இரவு சிகிச்சை மையத்திலிருந்து மாயமானார். இதுகுறித்த தகவலின்பேரில் உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், சிகிச்சை மையத்துக்கு வெளியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது. 

இதையடுத்து, பரமேஸ்வரனின் சடலத்தை மீட்ட போலீஸார், பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கரோனா மையத்தில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நோயாளி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →