நாகை மீனவர்களை மீட்க வேண்டும்: பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்
கொச்சி அருகே கடலில் காணாமல் போன நாகை மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாடுநாகை மீனவர்களை மீட்க வேண்டும்: பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்
கொச்சி அருகே கடலில் காணாமல் போன நாகை மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
கொச்சி அருகே கடலில் காணாமல் போன நாகை மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
மீனவர்களைத் தேட நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி இதனை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொச்சி அருகே மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது டவ்-தே புயலில் சிக்கி நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் மாயமாகினர். இதனால் அவர்களின் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.
அவர்களை விரைந்து கண்டறியும் வகையில் கடற்படை, விமானப்படை மூலம் மீனவர்களின் இருப்பிடத்தை அறிந்து உடனடியாக மீட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.