சிவகாசி: ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உருளைகளை வழங்கினார் சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் அசோகன்.
மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30-ஆவது நினைவு நாளையொட்டி சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் அசோகன் வெள்ளிக்கிழமை அரசு மருத்துவமனைக்கு இலவசமாக ஆக்சிஜன் உருளைகளை வழங்கினார். முன்னதாக அவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், நகராட்சியில் பணிபுரியும் களப்பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்து பரிசு வழங்கினார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு 15 வகையான மளிகைப் பொருள்களின் தொகுப்பை வழங்கினார். தொடர்ந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உருளையை மருத்துவமனை தலைமை மருத்துவர் டி. அய்யனார் இடம் வழங்கினார்.
மேலும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஒரு வேனையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் சிவகாசி நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.