கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென்று வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஏரியும் 108 ஆம்புலன்ஸ் 
தமிழ்நாடு

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்சில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன்  சிலிண்டர் திடீரென்று வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. 

DIN

கோவை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்திருந்த ஆம்புலன்ஸ் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை ஏற்றி வந்த 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை இறக்கிவிட்டு கரோனா வார்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

ஆக்சிஜன்  சிலிண்டர் திடீரென்று வெடித்த தீ விபத்தில் முற்றிலுமாக எரிந்துள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனம்

இந்நிலையில் ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆம்புலன்ஸில் ஏற்பட்ட தீயை அனைத்தனர். ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் உருளையில் ஏற்பட்ட கசிவே தீ விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இதில், அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காா்த்திகை மாத பிறப்பு: ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்

காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்த ஐயப்ப பக்தா்கள்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவம் தொடக்கம்

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ. 21,856 கோடி கடனுதவி

ஆற்றில் இறந்து கிடந்த மாற்றுத்திறனாளி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT