தமிழ்நாடு

இன்றும் நாளையும் 4,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் இன்றும் நாளையும் 4,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

DIN

தமிழகத்தில் இன்றும் நாளையும் 4,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, முதலமைச்சர் கடந்த 10-05-2021 முதல் 24-05-2021 வரையில் இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்திட உத்தரவிட்டு, தற்பொழுது நடைமுறையில் உள்ளது.

மேலும், கரோனா நோய்த் தொற்றின் தீவிரத்தினை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 24-05-2021 காலை முதல் அடுத்த
ஓரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கினை நீட்டித்து இன்று 22-05-2021 உத்திரவிட்டுள்ளார்கள். அந்த உத்தரவில் வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்றும் (22-05-2021) நாளையும் (23-05-2021) அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்கள்.

அதன் அடிப்படையில் இன்றும், நாளையும் (22 மற்றும் 23-05-2021) பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சு.ளு.ராஜகண்ணப்பனின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் இரு நாட்களுக்கு 1500 பேருந்துகள் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும், மாநிலத்தில் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே 3000 பேருந்துகளை இயக்கிட போக்குவரத்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், பயணிகள் கூடுதலாக வரும் பட்சத்தில் தேவையான பேருந்துகள் கூடுதலாக இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட இரு நாட்களில் பயணிகளின் தேவைக்கேற்ப சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இரவு நேரத்தில் சிறப்புப் பேருந்துகளும் முழுமையாக இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 23-05-2021 (ஞாயிறு) அன்று கடைசியாக புறப்படும் பேருந்துகள் பின்வருமாறு இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இயக்கப்படுகின்ற சிறப்புப் பேருந்துகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு விதித்துள்ள நோய்த் தடுப்பு வழிக்காட்டு நெறிமுறைகளான, கட்டாய முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்தல் போன்றவற்றை பின்பற்றியே பேருந்துகள் இயக்கப்படும். இதனை பயணம் மேற்கொள்ள வரும் பொதுமக்களும் தவறாது பின்பற்றி பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பொதுமக்கள் அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை பயன்படுத்திக் கொண்டு, பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தினையும் பின்பற்றி தங்கள் சொந்த இடங்களுக்கு பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் சென்றிட ஏதுவாக, மாநகரப் பேருந்துகள் சென்னையின் முக்கிய இடங்களில் இருந்தும் இயக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்! - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT