முகப்பு
தமிழ்நாடு

இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகள் இயங்காது

இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மே 10 முதல் சிறு தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருந்தபோதும் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் மே 24ஆம் தேதி முதல் தளர்வில்லா பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இந்த பொதுமுடக்கம் 24/05/2021 காலை முதல் நடைமுறைக்கு வரும். பொதுமக்கள் நலன் கருதி இன்று (22/05/2021) இரவு 09.00 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாளை (23/05/2021) ஒருநாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

பொதுமுடக்கத்தையொட்டி இன்றும், நாளையும் தமிழகத்தில் 4,500 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →