தமிழகத்திற்கு குறைவாக தடுப்பூசி ஒதுக்கீடு: நீதிமன்றம் அதிருப்தி
தமிழகத்திற்கு குறைவான அளவிலேயே தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு குறைவான அளவிலேயே தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும், தடுப்பூசி ஒதுக்கீடு அளவை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தடுப்பூசி ஒதுக்கப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2021 இறுதிக்குள் 216 கோடி டோஸ் உற்பத்தி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
இதனை குறித்துக்கொண்ட நீதிபதிகள், யாஸ் புயலால் ஒடிசாவில் இருந்து ஆக்ஸிஜன், விநியோகம் பாதிக்கும் என்பதால் மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தினர்.
தடுப்பூசி போடுவது குறித்த மக்கள் மத்தியில் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை மே 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.