தமிழ்நாடு

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

DIN

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள  21 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு தமிழக சுற்றுச் சூழல் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ.மீ .மெய்யநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாள்களாக அமைச்சர் மூன்று மாவட்டங்களில் தனித்தனியே ஆய்வுக் கூட்டம் நடத்தி, கரோனா தடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை மன்னார்குடி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் ஆய்வுக்கு வந்தவர். மருந்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவு , பிரசவப் பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டார்.

பின்னர், மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் மருத்துவர்  என்.விஜயகுமாரிடம் அரசு மருத்துவமனை மற்றும் கரோனா சிறப்பு முகாமில் சிகிச்சைப் பெறும் நோயாளிகள் எண்ணிக்கை, இதுவரை சிகிச்சைப் பெற்றவர்கள், இறப்பு, குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள் குறித்தும், இது நாள் வரை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மருந்துகள் இருப்பு பற்றியும், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் குறித்தும்  கரோனா தடுப்புப் நடவடிக்கைக்கு உள்ள தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது, அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, எம்எல்ஏக்கள் பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர்) , டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ. கயல்விழி ,வருவாய் கோட்டாட்சியர் த.அழகர்சாமி, வட்டாட்சியர் பா.தெய்வநாயகி , நகராட்சி ஆணையர் ஆர்.கமலா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT