ககன்தீப் சிங் பேடி 
தமிழ்நாடு

'சென்னையில் 2,000 வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய இலக்கு'

தள்ளுவண்டி, டிரை சைக்கிள் மூலமாக வார்டு வார்டாக சென்னையில் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

DIN

சென்னையில் 2,000 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,

சென்னை மாநகரில் தற்போது சுமார் 1,600 வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தள்ளுவண்டி, டிரை சைக்கிள் மூலமாக வார்டு வார்டாக சென்னையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சென்னையில் 2,000 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5,000 வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். படிப்படியாக அதனை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

காய்கறிகளை வீடு தேடிச் சென்று விற்பனை செய்ய வியாபாரிகள் முன்வந்தால் பயன்படுத்துகிறோம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்: மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பாம் திரைப்பட டிரைலர்!

18 மைல்ஸ் படத்தின் முன்னோட்டம்!

தீயணைப்புத் துறை ஆணையராக சங்கர் ஜிவால் நியமனம்!

எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

SCROLL FOR NEXT