முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு: கூடுதலாக 40 படுக்கை, ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திர செயல்பாடு துவக்கம்

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வார்டில் கூடுதலாக 40 படுக்கை மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திர செயல்பாடு துவக்க நிகழ்ச்சி டி.ஆர்.ஓ., முருகேசன் தலைமையில் நடந்தது.

Updated On : 26 மே, 2021 at 12:19 PM
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வார்டில் கூடுதலாக 40 படுக்கை மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திர செயல்பாட்டினை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:48 AM


ஈரோடு: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வார்டில் கூடுதலாக 40 படுக்கை மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திர செயல்பாடு துவக்க நிகழ்ச்சி டி.ஆர்.ஓ., முருகேசன் தலைமையில் நடந்தது.

செயல்பாடுகளை துவக்கிவைத்த வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:

ஈரோடு அரசு மருத்துவமனையில் 131 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை உள்ளது. புதிதாக 40 ஆக்சிஜன் இணைப்பு படுக்கை ஏற்படுத்தப்பட்டு 171 என உயர்ந்துள்ளது. 10 நாளில் இதனை 250 படுக்கையாக உயர்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

நோயாளியுடன் வருவோரை தங்க வைக்க தனிவசதி செய்ய உள்ளோம்.
நோயாளிகளின தேவையைப் பூர்த்தி செய்ய தன்னார்வலர்கள் உள்ளனர். தன்னார்வலர் பணி செய்ய விரும்பும் நபர்கள் எங்களை அணுகி சேவையை தொடரலாம்.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,550 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்புடன் ஏற்படுத்தும் பணி நடக்கிறது. விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

BNI அமைப்பு மூலம் 50 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தியுடன் செறிவூட்டும் இயந்திரத்தை வழங்கினர். அதன் செயல்பாடு துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 நோயாளிகளுக்கு ஆக்சிஜன், 24 மணி நேரமும் வழங்க முடியும். இதனை 100 படுக்கைக்கு வழங்கும்படி தரம் உயர்த்தும் பணி நடக்கிறது.

தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிக்கு சிகிச்சை தருவதில் சிக்கல் இருந்தால் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம். நோயாளிக்கு சிகிச்சை தர தாமதம் செய்யக்கூடாது. இப்பிரச்னையை தீர்க்க மாவட்ட அளவில் குழு அமைக்கப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.