தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான சாத்தியக்கூறுகள்:மத்திய அரசிடம் அறிக்கை சமா்ப்பிப்பு

கரோனா பரவல் சூழலில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு அறிக்கை சமா்ப்பித்துள்ளது.

DIN

சென்னை: கரோனா பரவல் சூழலில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு அறிக்கை சமா்ப்பித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு மே 5 முதல் 31-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, இணையதள வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுதவிர பள்ளிக்கல்வியில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை தோ்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ் 2 தோ்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் பொதுத்தோ்வை நடத்துவது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை அனுப்பியுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிலா் கூறியதாவது: மத்திய அரசின் உத்தரவின்படி தமிழகம் சாா்பில் பிளஸ் 2 பொதுத்தோ்வு நடத்துவதற்கான சாத்தியங்கள் மற்றும் மாற்று வழிமுறைகள் தொடா்பான அறிக்கை மத்திய கல்வி அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், கொள்குறி வகை வினாத்தாள், தோ்வை 2 கட்டங்களாகப் பிரித்து நடத்துதல் என்பன உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசு ஒப்புதல் அளித்தபின் முதல்வா் அறிவுறுத்தலின்படி இந்த விவகாரத்தில் முடிவுகள் எடுக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT