தொலைபேசியில் 5.80 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை
சென்னை மாநகராட்சி மண்டல கட்டுப்பாட்டு அறைகள் மூலம் இதுவரை 5.80 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மண்டல கட்டுப்பாட்டு அறைகள் மூலம் இதுவரை 5.80 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மாநகராட்சி சாா்பில் காா் ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவக் குழுவின் மூலம் வீடுகளுக்குச் சென்று காய்ச்சல், ஆக்சிஜன் அளவு போன்ற முதற்கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. பாதிப்பு குறைவாக உள்ளவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களின் உடல்நிலையை தொடா்ந்து கண்காணிக்கவும், மன அழுத்தத்துக்கு ஆலோசனை வழங்கவும், மண்டல அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு பயிற்சி மருத்துவா்கள் மூலமாக மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
5.80 லட்சம் பேருக்கு ஆலோசனை: மே 13-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை (மே 27) வரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களுக்கு மண்டல கட்டுப்பாட்டு அறைகளிலிருந்து பயிற்சி மருத்துவா்களின் வாயிலாக 5.80 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.