கூட்டுறவு வங்கிகளில் 5 சரவனுக்கு உள்பட்ட ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கான நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
40 கிராமுக்கு குறைவான நகைக்கடன்கள் தள்ளுபடி, ஒரு குடும்பத்துக்கு 5 சவரன் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி என்பது குடும்பத்துக்கு 5 சவரன் என சில தகுதிகளின் கீழ் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
அரசுக்கு ஏற்படும் செலவு, பூர்வாங்க மதிப்பீடு, ஆய்வு அடிப்படையில் ரூ.6 ஆயிரம் கோடி செலவாகும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2021 முதல் அரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை தள்ளுபடியின் அசல் தொகை வட்டியை அரசு ஏற்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தள்ளுபடி செய்யப்படும் இந்த அசல், வட்டியை அரசு ஏற்று கூட்டுறவு நிறுவனங்களுக்கு தொகையாக வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 16 லட்சம் நகைக்கடன்தாரர்கள் பலன்பெறுவார்கள் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.