தமிழ்நாடு

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

DIN

வன்னியர்களுக்கு  10.5 சதவீதம்  உள்ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாக்கல் செய்யப்பட்டது.

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டினை எதிர்த்து பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு மொத்தமாக 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு  சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு. பிப்ரவரி 28ஆம் தேதி சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியது. பிற்படுத்தப்பட்டோருக்கான 20%  இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்படும். இதற்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தில்மொத்தமாக உள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 68 சமூகத்தைக் கொண்ட சீர்மரபினர்களுக்கு 7% வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு 2.5% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால், 40 சமூகத்தை சேர்ந்த மக்களின் கல்வி, வேலை அனைத்தும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
ஆகவே, வன்னிய சமூகத்தினருக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யவும்  அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை ஒதுக்கீடு வழங்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் முந்தைய விசாரனையில் 1983ஆம் ஆண்டின் சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி அமர்வு விசாரணை செய்து வந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வுக்கு விசாரணையை மாற்றி உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பிற்படுத்தப்பட்டோர்  பிரிவில் வன்னியர்களுக்கு   10.5 சதவீதம்  உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT