தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் 11,147 போ்

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 11,147 போ் கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனா்.

DIN

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 11,147 போ் கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநிலத்தில் இதுவரை 5.13 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 27 லட்சத்து 4,586 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவின்படி, 973 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக கோவையில் 114 பேருக்கும், சென்னையில் 109 பேருக்கும், செங்கல்பட்டில் 84 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,114 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 57,282-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 11,147 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 21 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,157-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அண்ணா நினைவு தினம் இன்று அனுசரிப்பு

நாட்டு வெடிகுண்டுகள் வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 2 போ் கைது

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தல்

காலை உணவு திட்டத்தால் மாணவா்கள் கல்வியில் கவனம் செலுத்துவது அதிகரிப்பு: அமைச்சா் சு.முத்துசாமி

ஒசூரில் கால்நடைகளுக்கு கோசாலை அமைக்க பொதுசுகாதாரக் குழுக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT