தமிழ்நாடு

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி ரூ.7 அளவில் குறைப்பு: மக்கள் மகிழ்ச்சி

DIN


புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி ரூ.7 அளவில் குறைத்து அதற்கான அரசாணையை முதல்வர் என். ரங்கசாமி வெளியிட்டுள்ளார். 

மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ. 5 அளவிலும், டீசல் மீது ரூ. 10 என்ற அளவிலும் வரியை குறைத்து தீபாவளியன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி அரசு சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி ரூ. 7 அளவில் குறைத்து நடவடிக்கை எடுத்து அதற்கான அரசாணையும் முதல்வர் என்.ரங்கசாமி வெளியிட்டுள்ளார். இந்த நடைமுறை தீபாவளி தினமான இன்று வியாழக்கிழமை (நவ.4) முதல் அமலுக்கு வந்துள்ளது.

மத்திய, மாநில அரசின் வரி குறைப்பு மூலம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 12.85 காசுகளும், டீசல் ரூ.19 ஆகவும் குறையும்.

மத்திய, மாநில அரசின் இந்த வரி குறைப்பு மூலம், விலை குறைந்து அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தீபாவளி பரிசாக அமையுமென்று முதல்வர் என். ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து புதுச்சேரியில் ஒரு லிட்டர் ரூ. 107. 79க்கு விற்பனையாகி வந்த பெட்ரோல் தற்போது ரூ. 94.94 ஆகவும், ரூ.102.66க்கு விற்பனையாகி வந்த டீசல் ரூ. 83.58  ஆக குறைந்து விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT