தஞ்சாவூர் அண்ணா சாலையில் வெள்ளிக்கிழமை குப்பைகள் சேகரித்த மாநகராட்சிப் பணியாளர்கள். 
தமிழ்நாடு

தஞ்சாவூர் மாநகரில் ஒரே நாளில் 300 டன்கள் குப்பைகள் சேகரிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூர் மாநகரில் வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் ஏறத்தாழ 300 டன்கள் குப்பைகள் சேகரிக்கப்பட்டன.

DIN

தஞ்சாவூர்: தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூர் மாநகரில் வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் ஏறத்தாழ 300 டன்கள் குப்பைகள் சேகரிக்கப்பட்டன.

தஞ்சாவூர் மாநகரிலுள்ள 51 வார்டுகளில் நாள்தோறும் 110 டன்கள் முதல் 120 டன்கள் குப்பைகள் சேகரமாவது வழக்கம். இவை அனைத்தும் தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்திலுள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி, காந்திஜி சாலை, அண்ணா சாலை, தெற்கு வீதி, பழைய பேருந்து நிலையம், தெற்கு அலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டன. 

தஞ்சாவூர் பர்மா பஜாரில் வெள்ளிக்கிழமை குப்பைகள் சேகரித்த மாநகராட்சிப் பணியாளர்கள்.

சில நாள்களாகப் புத்தாடைகள் வாங்க வருவதற்காக ஏராளமானோர் இப்பகுதிகளில் திரண்டனர். இதனால், இப்பகுதிகளில் குப்பைகள் அதிகமாகச் சேகரமானது.

தீபாவளிக்கு முந்தைய நாளும், தீபாவளி நாளான வியாழக்கிழமையும் வழக்கமான குப்பைகளுடன், பட்டாசுக் குப்பைகளும் சேர்ந்ததால், இரு நாள்களில் குப்பைகள் அதிகமாகின.

எனவே, அரசு விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையும் கூட அதிகாலை 4.30 மணி முதல் மாநகராட்சிப் பணியாளர்கள் ஏறக்குறைய 550 பேர் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தத் தூய்மைப் பணியில் 40 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. 

குப்பைகள் சேகரித்த மாநகராட்சிப் பணியாளர்கள்.

இதன் மூலம் ஏறத்தாழ 300 டன்கள் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. ஒரே நாளில் இரு மடங்குக்கும் அதிகமான குப்பைகள் அகற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT