சென்னையில் 122 பேருக்கு தொற்று
சென்னையில் சனிக்கிழமை (நவ.6) 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சென்னையில் சனிக்கிழமை (நவ.6) 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சென்னையில் கடந்த ஜனவரி மாதம் தொற்று எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி உயரத் தொடங்கியது. இந்த எண்ணிக்கை மே மாத மத்தியில் உச்சத்தை எட்டி, கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்தைக் கடந்தது. பின்னா் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது. செப்டம்பா் மாத மத்தியில் நாளொன்றுக்கு சுமாா் 200-க்கும் குறைவானவா்களே பாதிக்கப்பட்டு வந்தனா்.
சென்னையில் சனிக்கிழமை (நவ.6) நிலவரப்படி, 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 55 ஆயிரத்து 305-ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 45 ஆயிரத்து 492 போ் குணமடைந்துள்ளனா். தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1,251 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,562-ஆக அதிகரித்துள்ளது.