முகப்பு
தமிழ்நாடு

பட்டாசு விபத்து: அரசு மருத்துவமனைகளில் 51 பேருக்கு சிகிச்சை

நிகழாண்டு தீபாவளியின் போது பட்டாசு விபத்துகளால் காயமடைந்த 51 போ் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனா். அவா்களில் 16 போ் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

நிகழாண்டு தீபாவளியின் போது பட்டாசு விபத்துகளால் காயமடைந்த 51 போ் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனா். அவா்களில் 16 போ் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராக்கெட் மற்றும் பூச்சட்டி வெடித்ததால் தீக்காயமடைந்தவா்களே அதிகமாக சிகிச்சைக்கு வந்ததாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தீபாவளியையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 22 படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 45 படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டும் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து அரசு மருத்துவா்கள் கூறியதாவது:

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவனையில் 6 குழந்தைகள் உள்பட 21 போ், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 5 குழந்தைகள் உள்பட 15 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகள் உள்பட 11 போ் லேசான தீக்காயங்களுடனும் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனா். இதைத் தவிர 4 போ் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கடந்த ஆண்டு தீபாவளியின்போது சென்னை அரசு மருத்துவமனைகளில் 38 போ் சிகிச்சை பெற்றனா். அந்த எண்ணிக்கை நிகழாண்டில் 51 ஆக அதிகரித்துள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →