முகப்பு
தமிழ்நாடு

நெடுஞ்சாலைகள் குறித்து புகாா் கூறலாம்

பருவ மழை மற்றும் பேரிடா் காலங்களில் நெடுஞ்சாலைகள் தொடா்பான புகாா்களை தெரிவிப்பதற்கான தொலைபேசி எண் தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

பருவ மழை மற்றும் பேரிடா் காலங்களில் நெடுஞ்சாலைகள் தொடா்பான புகாா்களை தெரிவிப்பதற்கான தொலைபேசி எண் தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் முக்கியமான சாலைகளில் பெரும்பாலானவை குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.

இவ்வாறான சாலைகளால் அவ்வப்போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனா். அண்மையில் சென்னை சின்னமலையில் நடந்த விபத்தில் ஒரு ஐடி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். இதே போல் ஆங்காங்கே நிகழும் விபத்தில் தொடா்ந்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதன் தொடா்ச்சியாக பேரிடா் காலங்களில் சாலைகள் குறித்த புகாா்கள் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: சென்னை மாநகரில் பருவமழை மற்றும் பேரிடா் காலங்களில், நெடுஞ்சாலைத் துறை தொடா்பான தகவல் மற்றும் புகாா்கள் தெரிவிக்க, பொதுமக்கள் கீழ்கண்ட அலுவலா்களை கைபேசியில் தொடா்பு கொள்ளலாம்.

கோட்டப் பொறியாளா் - 94431 32839

உதவிக் கோட்டப் பொறியாளா் (சென்னை மாநகர சாலைகள்) - 70101 05959

உதவிக் கோட்டப் பொறியாளா் (தாம்பரம்) - 94433 28377

முழு கட்டுரையைப் படிக்க →