திருப்புவனம் அருகே கால்வாயில் தவறி விழுந்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி சாவு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கால்வாயில் சென்ற இளைஞர் தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கால்வாயில் சென்ற இளைஞர் தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
திருப்புவனம் அருகே பிரமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கயா மகன் குருவையா(29). இவர் அருகேயுள்ள முதுவந்திடல் கிராமத்தில் பழையனூர் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் கால்வாயின் அருகே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் தவறி கால்வாய்க்குள் விழுந்தார். இதில் கால்வாயில் சென்று கொண்டிருந்த தண்ணீரில் மூழ்கி குருவையா உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பழையனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.