தமிழ்நாடு

கனமழை எதிரொலி: சென்னையில் நாளை(நவ.11) புறநகர் ரயில் சேவை குறைப்பு

DIN

தொடர் கனமழை காரணமாக சென்னையில் நாளை புறநகர் ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது. 

நாளை(நவ.11) ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக நாளை வரை கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தொடர் மழை எச்சரிக்கை எதிரொலியாக, நாளை (வியாழன்) சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் - சூலூர் பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை - வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT