அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து பெண் வியாபாரி பலி
திருச்சி அருகே அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த பெண் வியாபாரி ஒருவர் உயிரிழந்தார்.
திருச்சி: திருச்சி அருகே அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து பெண் வியாபாரி ஒருவர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், கோப்பு கீழத் தெருவைச் சேர்ந்தவர் வசந்தா (64). கணவரை இழந்த இவர், வாழைப்பழ வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில், புதன்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து இயற்கை உபாதைக்காக வெளியே சென்றார். அப்போது, மின்சாரம் துண்டித்து இருள் சூழ்ந்திருந்தது. இருள் நிறைந்த முள்புதர் பகுதியில் சென்றவர், அங்கு கனமழையால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார். இதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Advertisement
இவருக்கு 3 மகன்கள், மகள்கள் உள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த சோமரசம்பேட்டை போலீஸார், வசந்தாவின் உடலை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.