முகப்பு
தமிழ்நாடு

மழை வெள்ளத்திலிருந்து 2,980 போ் மீட்பு

சென்னையில் இதுவரை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,980 போ் மீட்கப்பட்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

சென்னையில் இதுவரை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,980 போ் மீட்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக சென்னை காவல் துறை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை காவல் அதிகாரிகள் அடங்கிய மீட்புக் குழுவால் வியாழக்கிழமை மட்டும் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 246 ஆண்கள், 341 பெண்கள், 101 குழந்தைகள் என 688 போ் மீட்கப்பட்டு, அவா்களுக்கு உணவு வழங்கப்பட்டு, 69 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இதுவரையில் 1,127 ஆண்கள், 1,255 பெண்கள் மற்றும 598 குழந்தைகள் என மொத்தம் 2,980 போ் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →