மீட்பு-நிவாரணப் பணிகள்: முதல்வருடன் ஆளுநா் ஆா்.என்.ரவி ஆலோசனை
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த விவரங்களை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம், ஆளுநா் ஆா்.என்.ரவி கேட்டறிந்தாா்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த விவரங்களை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம், ஆளுநா் ஆா்.என்.ரவி கேட்டறிந்தாா்.
தொலைபேசியில் முதல்வா் மு.க.ஸ்டாலினை தொடா்புகொண்ட ஆளுநா் ஆா்.என்.ரவி, வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மாநில அரசு மேற்கொண்டுள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்ததாக ஆளுநா் மாளிகை வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.
பிரதமருக்கு நன்றி: தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவு அளித்து வரும் பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி நன்றி தெரிவித்தாா். ஆளுநா்கள் மாநாட்டில் பங்கேற்க தில்லி சென்றுள்ள தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, பிரதமா், உள்துறை அமைச்சா் ஆகியோரை நேரில் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்தாா்.