உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் வியாழக்கிழமை கழுத்து அறுக்கப்பட்டு  இறந்த  தம்பதி. 
தமிழ்நாடு

உத்தமபாளையம் அருகே வயதான தம்பதி கழுத்தறுத்து கொலை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் வியாழக்கிழமை வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வயதான தம்பதி இறந்து கிடந்தனர்.

DIN



உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் வியாழக்கிழமை வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வயதான தம்பதி இறந்து கிடந்தனர். பணம் , நகையை திருடவந்தவர்கள் முதியவர்களை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில்  அப்பகுதியை சேர்ந்த  4 நபர்களை பிடித்து போலீஸர் விசாரணை செய்து வருகின்றனர்.

அனுமந்தன்பட்டி வார்டு 5 , வண்ணார் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா (80). இவரது மனைவி சிவகாமி (70). சலவைத் தொழிலாளியான  கருப்பையா பல ஆண்டுகளாக கேரளம் மாநிலம், திருச்சூரில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு, 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்களும், திருச்சூரிலே வேலை செய்து வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், கருப்பையா மற்றும் சிவகாமி  இருவரும் வயதுமுதிர்வு காரணமாக மீண்டும் அனுமந்தன்பட்டிக்கு திரும்பி வந்து தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை தம்பதி இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கை, கால், வாய் பகுதிகள் துணியால் கட்டப்பட்டு இறந்து கிடந்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ் நேரடியாக பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது தனிப்படை அமைத்து குற்றறவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.

முதல் கட்ட விசாரணை: தனிப்படை போலீசார் அனுமந்தன்பட்டியை சேர்ந்த 10- க்கும் மேற்பட்டவர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.  அதில், இறந்த கருப்பையாவிடம் தங்கம், பணம் அதிகமாக இருப்பதாக அவரது உறவினர் சிறுவன் கொடுத்த தகவலின் பேரில், அனுமந்தன்பட்டியை சேர்ந்த 3 பேர் ஆட்டோவில் சென்று வயதான தம்பதியை கொலை செய்து இருப்பதாக தகவல் வெளியானது.

இது சம்மந்தமாக சிறுவன் உள்பட 4 பேரிடம் உத்தமபாளையம் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT