தமிழ்நாடு

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

DIN

திருப்பூர்: திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் புதியதாக டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரிட்ஜ்வே காலனிகளை செயலாளர் எஸ்.சண்முகசுந்தரம் தலைமையில் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூர் மாநகராட்சி புதிய வார்டு எண் 31 பிரிட்ஜ்வே காலனி டிஎம்எஃப் பாலத்துக்கு வடமேற்கில் லட்சுமி நகர் ஈஸ்வரன் கோயில் அருகில் புதியதாக மதுபானக் கடை அமைக்க டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகளும், தொழிற்சாலைகளும் உள்ளதால் 3 ஆண்டுகளுக்கு முன்பாக செயல்பட்ட மதுக்கடையை மாவட்டநிர்வாகத்தின் சார்பில் அகற்றப்பட்டது.

இதே பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் பொதுமக்கள், தொழிலாளர்களின் பொது அமைதியை சீர்குலைக்கும். மேலும், பெண்கள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இடையூறை ஏற்படுத்தும். ஆகவே, பிரிட்ஜ்வே காலனி பகுதியில் மதுக்கடை அமைக்கும் முயற்சியை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT