தமிழ்நாடு

இன்று முதல் தமிழகத்தில் மழை நிலவரம் எப்படி இருக்கும்?

DIN


சென்னை: ஆந்திர கடலோர பகுதி முதல் குமரி கடல் பகுதி வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரியின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, வங்கக் கடலில் நேற்றைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவுகிறது.

ஆந்திர கடலோர பகுதி முதல் குமரி கடல் பகுதி வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,

இன்று குமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யும்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் சுரலாகோடு 15 செ.மீ. மழை, கன்னிமார் (குமரி), ஏற்காடு (சேலம்), தலா 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை பெய்த மொத்த மழையின் அளவு 416.5 மி.மீ. பெய்ய வேண்டிய இயல்பு அளவு 267. இது 56 சதவீதம் கூடுதலாகும்.

சென்னையில், பெய்த மொத்த மழையின் அளவு 810.4 மி.மீ. இயல்பு மழை அளவு 438.5 மி.மீ.. இதன் மூலம் சென்னையில் கூடுதலாக 85 சதவீத மழை பதிவாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT