காவிரி கரை பகுதிகளில் தடுப்புகளை ஏற்படுத்தி தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர். 
தமிழ்நாடு

காவிரியில் கூடுதல் நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

DIN


எடப்பாடி: மேட்டூர் அணையில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், ஆனால் இன்று அதிகாலை தனது முழு கொள்ளளவை எட்டி நிலையில், அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனையடுத்து செக்கானூர், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை உள்ளிட்ட காவிரி கதவணை பகுதிகளில் வழக்கத்தைவிட கூடுதலான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரிக் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 பூலாம்பட்டி காவிரி கரை பகுதிகளில் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.  

குறிப்பாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மணல் திட்டுகள் உள்ளிட்ட ஆபத்தான பகுதிகளில் கரையோரப் பகுதி விவசாயிகள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடவேண்டாம் எனவும். காவிரி கரையோரங்களில் உள்ள படித்துறை,படகுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குளிப்பது, துணிதுவைதல் மற்றும் நீரோட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் ஆற்றை கடக்க முயற்சிப்பது, கரையோரப் பகுதிகளில் மீன் பிடித்தல் உள்ளிட்ட ஆபத்தை விளைவிக்கும் செயல்களை பொதுமக்கள் தவிர்த்துவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்புகளை மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ளது.

இந்நிலையில், பூலாம்பட்டி காவிரி கரை பகுதிகளான, விசைப்படகு செலுத்துமிடம், பரிசில் துறை, படித்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் தருணத்தில் அப்பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள பேரிடர் மீட்பு முகாம், காவல்துறை அல்லது தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT