முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்: நீர்மட்டம் 120 அடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று சனிக்கிழமை இரவு 11.35 மணிக்கு முழு கொள்ளளவான 120 அடியாக உயர்ந்தது. அணையின் 88 ஆண்டுகால வரலாற்றில் 41-வது ஆண்டாக நிரம்பியுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உயர்வு
பகிர்:


மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று சனிக்கிழமை இரவு 11.35 மணிக்கு முழு கொள்ளளவான 120 அடியாக உயர்ந்தது. அணையின் 88 ஆண்டுகால வரலாற்றில் 41-வது ஆண்டாக நிரம்பியுள்ளது. 

அணைக்கு வினாடிக்கு 24,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக 22,000 கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக 2,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. 

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.
மழையளவு 16.80 மி.மீட்டராக பதிவாகியுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments