தமிழ்நாடு

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை! ஒரு சவரன் ரூ. 37,200

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.37,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.37,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீப சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ஒரு சவரன் தங்கம் ரூ. 36,000-யைத் தாண்டிய நிலையில் தற்போது ரூ. 37,000-யைத் தாண்டி அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் 4 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 35,576 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இன்று(செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம்(22 காரட்) தங்கம் ரூ.14 உயர்ந்து, ரூ.4,650-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.112 உயர்ந்து ரூ.37,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 71.50 -க்கும் , கட்டி வெள்ளி கிலோ ரூ71,500-க்கும் விற்பனையாகிறது.  

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,650

1 பவுன் தங்கம்............................... 37,200

1 கிராம் வெள்ளி............................. 71.50

1 கிலோ வெள்ளி.............................71,500

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,636

1 பவுன் தங்கம்...............................37,088

1 கிராம் வெள்ளி............................. 71.50

1 கிலோ வெள்ளி.............................71,500

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - துலாம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கன்னி

பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் பலி!

பிப்ரவரி மாதப் பலன்கள் - சிம்மம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT