தமிழ்நாடு

பொங்கலுக்கு 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு: ஸ்டாலின் அறிவிப்பு

DIN


சென்னை: வரும் ஜனவரி மாதம் கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 20 பொருள்கள் வழங்கப்பட உள்ளது. அதில், ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், கோதுமை மாவு, உப்பு ஆகிய 20 பொருள்கள் அடங்கும்.

தமிழகத்தில் வசிக்கும் 2கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்ககுக்கு 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

டெம்போவில் ராகுல்!

டெம்போவில் ராகுல் காந்தி!

SCROLL FOR NEXT