தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) நியமனம்

DIN


சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்கும் வரை தலைமை நீதிபதியாக (பொறுப்பு) துரைசாமி பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஸ்வரர் நாத் பண்டாரி விரைவில் பதவியேற்கவுள்ளார். அதுவரை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) துரைசாமி பதவி வகிப்பார். இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, இன்று (நவ.17) காலை காரில் சாலை மார்க்கமாக கொல்கத்தாவிற்கு புறப்பட்டுச் சென்றார். அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிவு உபச்சார விழாவையும் புறக்கணித்து அவர் பயணம் மேற்கொண்டார்.

தனிப்பட்ட முறையில்  விடைபெறாமல் செல்வதற்காக என்னை  மன்னியுங்கள் என்றும் அவர் கடிதம் மூலம் வருத்தம் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT