மேட்டூர் அணை நிலவரம்!
காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 45,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 45,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 45,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதையும் படிக்க | விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு: பயிா்ச் சேத ஆய்வுக்குப்பின் முதல்வா் அறிவிப்பு
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.63 டி.எம்.சி. ஆக இருந்தது.
இதையும் படிக்க | தடுப்பூசி செலுத்தியவா்கள் இந்தியாவுக்கு அச்சமின்றி பயணம் செய்யலாம்
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மழையளவு 59.40 மி.மீட்டராக பதிவாகியுள்ளது.