அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட யோகேஸ்வரன் 
தமிழ்நாடு

கும்பகோணத்தில் இளைஞர் அரிவாளால் வெட்டிக்கொலை

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

DIN


கும்பகோணம்: கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கும்பகோணம் மகாவீர் நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவருக்கு யோகேஸ்வரன் (21), லோகேஸ்வரன்(21) என இரட்டைப் பிள்ளைகள்.

இவர்களில் யோகேஸ்வரன் அசூர் சாலையிலுள்ள தனியார் கல்லுாரியில் இளநிலை வணிகவியல் பட்டபடிப்புப் படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு யோகேஸ்வரன் வீட்டிலிருந்து கும்பகோணம் டாக்டர் மூர்த்தி சாலையைச் சேர்ந்த தனது நண்பரான நந்தகுமாருடன் (21) மோட்டார் சைக்கிளிலில் வீட்டிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்தனர்.

வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் சென்ற இருவரையும் மர்ம நபர்கள் 6 பேர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பலத்தக் காயமடைந்த இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

பின்னர் மேல் சிகிச்சைகாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யோகேஸ்வரன் அங்கு உயிரிழந்தார்.

இது குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோக்காரர்...

தேவிகா - நான் சந்தித்த பிரபலங்கள் - 22

நூற்றுக்கு நூறு அவ... ரேவதி சர்மா!

அபூர்வம்...

ஆரோவில் உருவானது எப்படி?

SCROLL FOR NEXT