தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம்

DIN


புது தில்லி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர நாத் பண்டாரியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 

சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானா்ஜி இரு தினங்களுக்கு முன் மேகாலய உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டாா்.

இதையடுத்து உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் நீதிபதி முனீஷ்வா் நாத் பண்டாரி, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக   நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக சென்னை உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம்.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை நீதிபதி பொறுப்பேற்கும் வரை தலைமை நீதிபதி பணிகளை தற்காலிகமாக நீதிபதி எம்.துரைசாமி கவனிப்பார் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

கயிறு இறுக்கி சிறுமி உயிரிழப்பு

உற்பத்தியில் உச்சம் தொட்ட சிபிசிஎல்

SCROLL FOR NEXT