கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
கடலூர் துறைமுகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
கடலூர்: கடலூர் துறைமுகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
தென்கிழக்கு வங்கக் கடல், மற்றும் தென்மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காலை 11.30 மணியளவில் உருமாறியுள்ளது.
இது சென்னைக்கு 310 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு 270 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் வட தமிழக-தெற்கு ஆந்திரப் பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 3 ஆம் எண் உள்ளூர் எச்சரிக்கை குறியீடு இன்று ஏற்றப்பட்டது.