தமிழ்நாடு

சிவகாசியில் கிராம சுகாதார செவிலியர்கள் முற்றுகைப் போராட்டம்

DIN

தமிழ்நாடு அரசு கிராம செவிலியர்கள் சங்கம் சார்பில் சிவகாசி மற்றும் விருதுநகர் சுகாதார மாவட்டத்தைச் சேர்ந்த கிராம செவிலியர்கள் வியாழக்கிழமை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

செவிலியர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று கரோனா தடுப்பூசி மருந்து எடுத்துச் செல்ல வாகன வசதி செய்து தரவேண்டும், வீடுவீடாக தடுப்பூசி பணிக்குச் செல்பவர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும், தடுப்பூசி போட்டவர்களுக்கு ஆன்லைன் மூலம் என்ட்ரி போடுவதற்கு தனியே ஆட்களை நியமிக்க வேண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று மருந்து பெறும் நேரத்தை 7 மணியாக இருக்கும் நிலையில் 9 மணியாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 100 செவிலியர்கள் சிவகாசி இஎஸ்ஐ மருத்துவமனை அருகில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதில் சங்க மாநிலத் தலைவர் அந்தோணியம்மாள், மாவட்டச் செயலாளர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 30 நிமிடம் போராட்டம் நடத்திவிட்டு பின்னர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT