முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

​காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (வியாழக்கிழமை) இரவு வினாடிக்கு 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:35 AM
கோப்புப்படம்
பகிர்:


காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (வியாழக்கிழமை) இரவு வினாடிக்கு 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 50,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக இருந்தது.

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,000 கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 28,000 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.63 டி.எம்.சியாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →