மதுரை தனியார் பள்ளியில் மாடியிலிருந்து குதித்து +2 மாணவி தற்கொலை முயற்சி 
தமிழ்நாடு

மதுரை தனியார் பள்ளியில் மாடியிலிருந்து குதித்து +2 மாணவி தற்கொலை முயற்சி

மதுரையில் தனியார் பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த பிளஸ் 2 மாணவி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

DIN


மதுரை: மதுரையில் தனியார் பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த பிளஸ் 2 மாணவி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மதுரையில் பிரபலமான தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவி ஒருவர், வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளார்.

பள்ளியில் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், அவர் திடீரென்று இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் துன்புறுத்துவதாக கூறி மாணவர் ஒருவர் இரண்டாவது மாடியிலிருந்து தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

SCROLL FOR NEXT