FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணை கிருஷ்ணகிரி அணை, பாம்பாறு அணை ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது வருகிறது.

28 ஜனவரி 2024, 10:06 am IST
கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர்.
பகிர்:



கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணை கிருஷ்ணகிரி அணை, பாம்பாறு அணை ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த அனைத்து அணைகளில் பிரதான மதகுகள் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி அணையின் ,2,4,5,6 ஆகிய  பிரதான மதகுகளிலிருந்து வினாடிக்கு 8,409 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலை 7 மணி அளவில் பெய்த மழை அளவு (மி.மீ): ஊத்தங்கரை -136.8, பெனுகொண்டபுரம் -114.16, போச்சம்பள்ளி -112.2, பாரூர் -105,4, கிருஷ்ணகிரி -102-4, தேன்கனிக்கோட்டை -101, சூளகிரி -97, ஓசூர் -94.6, நெடுங்கல் -87.6, தளி - 36, ராயக்கோட்டை -33, அஞ்செட்டி -27. மொத்த மழையளவு - 1047.96. 

அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி ஆகும்.  தற்போது 51.25 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7,026 கன அடி நீர் வரத்து உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments