தமிழ்நாடு

மழை பாதிப்பு நிவாரணம்: ரூ.4,625.80 கோடி வழங்க கோரிக்கை

DIN

மழை பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக ரூ.4625.80 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

முதல்கட்டமாக ரூ.2,629 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அறிக்கை அளிக்கப்பட்டது. எனினும் மழையால் ஏற்பட்ட பாதிப்பு அதிகமாக உள்ளதால், நிவாரணப் பணிகளுக்கானத் தொகையை கூடுதலாக தமிழக அரசு கோரியுள்ளது.

இதில் தற்காலிக சீரமைப்புக்கு ரூ.1,070.92 கோடியும், நிரந்தர சீரமைப்பு பணிக்கு ரூ.3,554 கோடியும் தேவைப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் நிதிக்காக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தில்லி விரைந்துள்ளனர். தேவையான நிதியினை தமிழகம் சார்பில் அவர்கள் கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT