கோவை: ரயில் மோதியதில் 3 யானைகள் பலி
ரயில் மோதியதில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 3 யானைகள் பலியாகியிருக்கிறது.
கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம் கே. ஜி.சாவடி காவல் நிலைய சரகம் மகேந்திர மேடு, நவக்கரை அருகே உள்ள தங்கவேல் காட்டு
மூளை அருகில் மங்களூர்- சென்னை செல்லும் ரயில் வெள்ளிக்கிழமை இரவு சென்றபோது ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 25 வயதுடைய பெண் யானை மற்றும் அதனுடன் இரண்டு பெண் யானை குட்டிகள் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இதுதொடர்பாக வனத்துறையினர், காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Advertisement