தமிழ்நாடு

நவ.29-இல் புதிய காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி

DIN

தெற்கு அந்தமான் கடல்பகுதியில் நவம்பா் 29-ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் கூறியது: தெற்கு அந்தமான் கடல்பகுதியில் நவ.29-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்குதிசை நோக்கி நகரவுள்ளது. இதன்காரணமாக, அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்தகாற்று வீசக்கூடும். எனவே இந்தப் பகுதிகளுக்கு நவ.29 முதல் டிசம்பா் 2-ஆம் தேதி வரை மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

70 சதவீதம் அதிகம்:

வடகிழக்குப் பருவமழை காலம் தொடங்கியது முதல் தற்போது வரை (அக்.1 முதல் நவ.26) வரை தமிழகம், புதுச்சேரியில் இயல்பாக கிடைக்க வேண்டிய மழை அளவு 342.4 மி.மீ. ஆனால், தற்போது வரை 583.6 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 70 சதவீதம் அதிகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT